Published : 24 Mar 2021 03:13 am

Updated : 24 Mar 2021 07:03 am

 

Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 07:03 AM

100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து கம்பளா போட்டியில் சீனிவாஸ் புதிய சாதனை

srinivas-gowda
எருமை காளைகளுடன் சீறி பாயும் சீனிவாஸ் கவுடா (கோப்பு படம்)

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் சேறு நிறைந்த வயல் பகுதிகளில் எருமைக் காளைகளை விரட்டிச் சென்று இலக்கை தொடும் கம்பளா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சீனிவாஸ் கவுடா (30) 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், மங்களூரு அருகேயுள்ள வேனூர் பெருமடாவில்சூர்ய-சந்திர ஜோடுகெரே கம்பளா போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற‌ சீனிவாஸ் கவுடா, 125 மீட்டர் தூரத்தை 11.21 வினாடிகளில் கடந்து முதல் பரிசை வென்றார். இதில் அவர் 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தி இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டினர். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் தடகள வீரர் உசேன் போல்ட் 9.58 வினாடிகளில் கடந்தது உலக சாதனையாக கொண்டாடப்படுகிறது.


கர்நாடக உசேன் போல்ட் என அழைக்கப்படும் கம்பளா வீரர் சீனிவாஸ் கவுடா 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து, உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளதாக பாராட்டியுள்ளனர்.



கம்பளா போட்டிசீனிவாஸ் புதிய சாதனைகர்நாடக உசேன் போல்ட்சீனிவாஸ் கவுடாSrinivas gowda

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x