உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்: டிசம்பர் 2-ல் எச்.எல்.தத்து ஓய்வு பெறுகிறார்

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்: டிசம்பர் 2-ல் எச்.எல்.தத்து ஓய்வு பெறுகிறார்
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், 43-வது தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை நீதிபதி எச்.எல்.தத்து டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கும் பணியில் உச்ச நீதிமன்றம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது .

தலைமை நீதிபதி பதவிக்கு டி.எஸ்.தாக்கூர் பெயரை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு எச்.எல்.தத்து பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்ததும் பிரதமர் அலுவலகம் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்களது ஒப்புதலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து அறிவிக்கப்படும்.

வாழ்க்கை குறிப்பு

1952-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி பிறந்த தாக்கூர், 1972-ல் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய இவர், சிவில், கிரிமினல், வரி மற்றும் அரசியல் சாசனம் உட்பட அனைத்து விதமான வழக்குகளையும் கையாண்டுள்ளார்.

1994-ல் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், அதே ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டார். பின்னர் டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியா கவும் பதவி வகித்த டி.எஸ்.தாக்கூர், 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in