Last Updated : 23 Mar, 2021 03:13 AM

 

Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

ஜெர்மனியில் வசிக்கும் அஹமதியான் முஸ்லிம்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்: உயிருக்கு ஆபத்து என சொந்த நாடான பாகிஸ்தான் திரும்ப மறுப்பு

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவுகள் அல்லாமல் அஹமதியான் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இப்பிரிவினரை தம் மதத்தவர் என உலக முஸ்லிம்கள் ஏற்பதில்லை. இதற்கு முஸ்லிம்களின் மதக்கோட் பாடுகளில் அஹமதியான்களுக்கு வேறு வகையான கொள்கை உள்ளிட்ட சில கருத்து வேறுபாடு கள் காரணமாக உள்ளன.

இதன் அடிப்படையிலேயே பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 1835-ல் பிறந்த மிர்சா குலாம் அகமது என்பவர் அஹமதியான் பிரிவை உருவாக்கினார். இவர்கள் தனி மசூதிகளில் தொழுகை நடத்துகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால், முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் அஹமதி பிரிவினரை 1974-ல் சட்டம் இயற்றி ‘முஸ்லிம் அல்லாத வர்கள்’ எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மற்ற பிரிவு முஸ்லிம்களை இஸ்லாத்தின் முறைப்படி ‘அஸ்ஸலாம் அலைக் கும்’ எனக்கூறி வணங்குவதும் தண்டனைக்குரியக் குற்றமாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானில் அஹமதியான்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவும் கருதப்படு வதால் அவர்கள் பல்வேறு நாடு களில் அகதிகளாக வசிக்கின்றனர்.

ஜெர்மனியில் அகதிகளாகத் தங்கியுள்ள அஹமதியான் முஸ் லிம்கள் 528 பேரை தற்போது நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தங்கி நாடு திரும்பி யவர்களில் சிலர் வெளிநாடுகளின் உளவாளிகள் எனக் கருதி பாகிஸ்தானியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால், அஹமதியான்கள் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவில் அகதிகளாக வாழ விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பஞ்சாபின் காதி யானில் வாழும் அஹமதியான் முஸ்லிம்கள் கூறும்போது, “நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானிலும் அஹமதியான் பிரிவினரை வளர்க்கும் பொருட்டு எங்களில் ஒரு சில குடும்பத்தினர் இங்கிருந்து அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானில் அவர்கள் பலவகை கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்திய பிரஜையாக முடியாது. எனவே அகதிகளாகவாவது இங்கு வாழ மத்திய அரசிடம் ஜெர்மனியிலுள்ள அஹமதியான் அகதிகள் கோரியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x