Last Updated : 22 Mar, 2021 09:09 AM

 

Published : 22 Mar 2021 09:09 AM
Last Updated : 22 Mar 2021 09:09 AM

"பாஜகவினருக்கு கரோனா வராது..." சர்ச்சைக் கருத்தை திரும்பப் பெற்றார் குஜராத் எம்எல்ஏ கோவிந்த் படேல்

பாஜகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்கு கரோனா தொற்று வராது என்று பேசிய குஜராத் பாஜக எம்எல்ஏ கோவிந்த் படேல் தனது கருத்தைத் திரும்பப் பெற்றார்.

குஜராத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அங்கு பல இடங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம், அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளாலேயே கரோனா வேகமாகப் பரவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இந்நிலையில், ராஜ்கோட் தெற்கு தொகுதி எம்எல்ஏ கோவிந்த் படேல், கடுமையாக உழைப்பவர்களுக்குக் கரோனா வராது. பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஆகையால் ஒரே ஒரு உழைப்பாளிக்குக் கூட கரோனா தொற்று ஏற்படாது எனப் பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "நான் உழைப்பாளிகளுக்கு கரோனா வராது என்றே சொல்லவந்தேன். ஆனால், தவறுதலாக பாஜக என்று இணைத்துப்பேசிவிட்டேன். எனது கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்" என்று கூறினார்.

குஜராத் மாநிலத்தில் அண்மையில் முதல்வர் விஜய் ரூபாணிக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் பாஜக மூத்த தலைவர் ரஞ்சன்பென் பட்டுக்கும் தொற்று உறுதியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x