

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட தலித் சிறுமிகளின் கிராமமான கட்ராவில் உள்ள அனைத்து வீடுகளுக் கும் கழிவறையை கட்டித்தர சுலப் இன்டர்நேஷனல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
பதான் மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கச் சென்ற இரு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இயற்கை உபாதையை கழிப்பதற்காக கட்ரா கிராமப் பெண்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில், வீடுகளிலேயே கழிவறையை கட்டித்தர சுலப் தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது.
இது தொடர்பாக தொண்டு நிறுவன நிறுவனர் பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், “திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கச் செல்லும் பெண்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலை யில் உள்ளனர். இதை உணர்ந்து அனைத்து கிராமங்க ளிலும் கழி வறைகளைக் கட்டித் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.