

சொத்து பிரச்சினைக்காக இந்தி ராணி முகர்ஜி தன் மகள் ஷீனா போராவை படுகொலை செய்திருப் பதாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஷீனாவின் தாய் இந்திராணி, அவரது முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் மற்றும் 2வது கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் திடீர் திருப்ப மாக இந்திராணியின் 3வது கணவரும் ஸ்டார் இந்தியா டிவி முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜியையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது கொலை மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சாட்சியங்களை அழித்து, மனைவி இந்திராணியை காப்பாற்ற முயன்றதாகவும் அவர் மீது சிபிஐ அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடித்த இந்திராணி, மூன்றாவது முறையாக பீட்டர் முகர்ஜியை மணந்து கொண்டார். முதல் கணவர் மூலம் இந்திராணிக்கு ஷீனா மற்றும் மிக்கேல் போரா ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். ஆனால் இருவரும் தனது தங்கை மற்றும் தம்பி என வெளியுலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பீட்டர் முகர்ஜியை மணந்து கொண்டார்.
இதே போல், பீட்டர் முகர்ஜிக்கு முதல் மனைவி மூலம் ராகுல் என்ற மகன் உள்ளார். இவரும், இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போராவும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். முறையற்ற இந்த திருமணத்தை இந்திராணி தடுத்துள்ளார். மேலும் தெற்கு டெல்லியில் ஷீனாவுக்கு ராகுல் வாங்கி கொடுத்த வீட்டையும் இந்திராணி விற்றுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஷீனா வீட்டை விற்ற பங்கு தனக்கு வேண்டும் என்றும், ராகுலை திருமணம் செய்து கொள்வது உறுதி என்றும் இந்திராணியிடம் வாதம் செய்துள்ளார். மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்தால், இந்திராணி தனது தாயார் என்ற ரகசியத்தை அம்பலப்படுத்தப் போவதாகவும் ஷீனா மிரட்டி இருக்கிறார்.
ஷீனாவுக்கும், ராகுலுக்கும் திருமணம் நடந்தால் ஒட்டுமொத்த சொத்தும் அவர்களுக்கு சென்றுவிடும் என ஏற்கெனவே அச்சத்தில் இருந்த இந்திராணி இந்த மிரட்டல் காரணமாக கடும் எரிச்சல் அடைந்துள்ளார். இதன் பிறகே, தனது 2வது கணவர் சஞ்ஜய் கண்ணா மற்றும் முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் உதவியுடன் ஷீனாவை கொலை செய்ய அவர் சதித் திட்டம் தீட்டி னார் என, இந்த கொலை தொடர் பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள் ளது. ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக ராய்கட் போலீஸார் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், ராய்கட் வனப்பகுதியில் இருந்து ஷீனா போராவின் உடல் கண்டெடுக்கப்பட்டதும் ஏன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும் காவல்துறை இயக்கு னரிடம் மகாராஷ்டிர மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.
எச்சரித்த 2-வது கணவரின் மகள் வித்தி
ஷீனா போராவை கொலை செய்ய முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவுடன் இணைந்து இந்திராணி சதித் திட்டம் தீட்டிய விவரங்களை அவரது மற்றொரு மகள் வித்தி எச்சரித்திருந்த விபரமும் தற்போது வெளியாகியுள்ளது. ஷீனாவை கொலை செய்ய இந்திராணி திட்டம் தீட்டியது குறித்த விவரங்கள் கேள்விப்பட்ட வித்தி உடனடியாக அந்த செய்தியை ராகுலுக்கும், ஷீனாவுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்தார். அந்த எஸ்எம்எஸ் செய்தியில் ‘உங்கள் இருவர் மீதும் அம்மா கவலையாக உள்ளார். உங்கள் உறவை பிரிக்க அவர் விரும்புகிறார். இதற்காக எதையும் செய்ய அவர் காத்திருக்கிறார். எனவே எச்சரிக்கையாக இருங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.