கரோனா தொற்று: புதிய பாதிப்புகளில் 77.7% மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசத்தில் பதிவு

கரோனா தொற்று: புதிய பாதிப்புகளில் 77.7% மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசத்தில் பதிவு
Updated on
1 min read

ஒரு சில மாநிலங்களில் கரோனா அன்றாட புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில் 77.7% மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 43,846 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27,126 பேரும், பஞ்சாபில் 2,578 பேரும், கேரளாவில் 2,078 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,25,138 முகாம்களில்‌ 4,46,03,841 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77,79,985 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 48,77,356 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 80,84,311 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 26,01,298 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 36,33,473 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 1,76,27,418 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 3,09,087 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,30,288 ஆக (95.96%) இன்று பதிவாகியுள்ளது.‌ கடந்த 24 மணிநேரத்தில் 22,956 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19-ஆல் 197 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in