

நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே இப்போதுதான் நல்ல காலம் தொடங்கி உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிஹார் தேர்தல் முடிவு மோடிக்கும் பாஜகவுக்கு மான தோல்வி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூறி உள்ளது.
பிஹார் தேர்தல் முடிவு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தத் தேர்தலில் இடதுசாரி களுக்கு வெற்றி கிடைக்காதது கவலை அளிக்கிறது. ஆனாலும், பாஜகவும் பிரதமர் மோடியும் மக்க ளால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மாநில தேர்தலுக்காக முன் எப் போதும் இல்லாத வகையில் உள்ளூர் தலைவரைப் போல பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். ஆனாலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. எனவே, இதை மோடி மீதான மக்க ளின் தீர்ப்பாகவே கருத வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மஹா கூட்டணிக்கும் மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம் நாட்டு மக்களுக்கு இப்போதுதான் நல்லகாலம் தொடங்கி உள்ளது. மோடி அலை டெல்லி தேர்தலிலேயே ஓய்ந்தது.
இப்போது பிஹாரிலும் ஓய்ந்திருக்கிறது” என்றார்.