கரோனா தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும்: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

கரோனா தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும்: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது: சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள் ளது.

முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயதுக்கு உட்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி திட்டம் மேலும் விரிவுபடுத்தப் படும். கரோனா வைரஸ் அடிக்கடி உருமாறுகிறது. அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளின் அடிப் படையில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு சார்பில் தற்போது 12 வகை யான தடுப்பூசி திட்டங்கள் அமலில் உள்ளன. இந்திய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, நம்பகத்தன்மை வாய்ந்தவை, நல்ல பலன் அளிக்கக் கூடியவை.

எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியாவில் இதுவரை 4 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் 0.000432 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. பெரியம்மை, போலியோவை ஒழித்தது போன்று தடுப்பூசியால் கரோனாவையும் ஒழிக்க முடியும்.

திருமணத்துக்கு முன்பாக மணமகனும் மணப்பெண்ணும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இந்த ரத்த ஜாதகத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு தலசீமியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

டெல்லியில் செஞ்சிலுவை சங்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் 80 இடங்களில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. கரோனா காலகட்டத்தில் செஞ்சிலுவை ரத்த வங்கிகள் தேவையுள்ள மக்களுக்கு தன்னலமின்றி சேவையாற்றியது. அந்த அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 138 கோடி மக்கள் வசிக் கின்றனர். இதில் ஒருசதவீதம் பேர் ரத்த தானம் செய்தால் கூட பற்றாக்குறை ஏற்படாது.

எச்ஐவியை கண்டறியும் எலைசா சோதனைக்கு மாற்றாக செஞ்சிலுவை சங்கம் சார்பில் என்ஏடி பரிசோதனை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு 137 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in