3 நாள் பயணமாக பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி

3 நாள் பயணமாக பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

பிரிட்டனில் 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 12-ம் தேதி லண்டன் செல்கிறார்.

பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக அவர் பிரிட்டன் செல்கிறார். பிரதமர் தனது பயணத்தின் முதல் நாளான 12-ம் தேதி பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மத்தியில் மோடி பேசவுள்ளார்.

மோடி 12-ம் தேதி மாலை, பிரிட்டன் தொழிலபதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாடுகிறார்.

நவம்பர் 13-ம் தேதி, வார்விக் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அன்று மதியம் பிரதமர் மோடிக்கு ராணி எலிசபெத் விருந்து அளித்து கவுரவிக்கிறார். மாலையில், வெம்ப்லி மைதானத் தில் பிரிட்டன் வாழ் இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார்.

பிரதமர் தனது பயணத்தின் இறுதிநாளான 14-ம் தேதி லண்டனில் டாக்டர் அம்பேத்கர் இல்ல அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in