Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள் ளிட்ட 8 மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாட்டில் ஏற்படும் தினசரி தொற்றில் கடந்த 24 மணி நேரத்தில் மகா ராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 76.22 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்படும் தினசரி கரோனா தொற்றில் மகாராஷ்டிராவில் 62 சதவீதம் பேரும், கேரளாவில் 8.83 சதவீதம் பேரும், பஞ்சாபில் 5.36 சதவீதம் பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் புனே, நாக்பூர், மும்பை, தாணே, நாசிக் மாவட்டங்களில் அதிக அளவில் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கேரளாவில் எர்ணா குளம், பத்தனம்திட்டா, கண்ணூர், பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட் டங்களில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில் ஜலந்தர், எஸ்ஏஎஸ் நகர், பாட்டியாலா, லூதியாணா, ஹோஷி யார்பூர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த 3 மாநிலங்கள் தவிர தமிழ்நாடு, மத்தியபிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதி கரித்து வருகிறது. அதே நேரத்தில் கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட் டும் மகாராஷ்டிராவில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 38, கேரளாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் அசாம், உத்தராகண்ட், ஒடிசா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், சிக்கிம், லடாக், மணிப்பூர், தாத்ரா அன்ட் நாகர் ஹவேலி, டாமன் அன்ட் டையூ, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒருவர் கூட கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கவில்லை.

4 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி இதுவரை நாடு முழுவதும் 4.20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டும்.

இதுவரை சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு முதல் டோஸாக 77 லட்சத்து 6,839 பேருக்கும் இரண்டாவது டோஸாக 48 லட்சத்து 4,285 பேருக்கும் போடப் பட்டுள்ளது. இதேபோல் முன்களப் பணியாளர்களுக்கு முதல் டோஸாக 79 லட்சத்து 57,606 பேருக்கும் இரண்டாவது டோஸாக 24 லட்சத்து 17,077 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 32 லட் சத்து 23,612 பேருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட 1 கோடியே 59 லட்சத்து 53,973 பேருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x