பிரதமர் நரேந்திர மோடி 30-ம் தேதி புதுச்சேரி வருகை: கூட்டணித் தலைவர்களுடன் பங்கேற்று உரையாற்றுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி 30-ம் தேதி புதுச்சேரி வருகை: கூட்டணித் தலைவர்களுடன் பங்கேற்று உரையாற்றுகிறார்
Updated on
1 min read

பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகிறார். ஏஎப்டி திடலில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணித் தலைவர் களுடன் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழகம், புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. புதுவையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக 30-ம் தேதி புதுவை வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரி பாஜக அலு வலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்பி, பாஜக பொதுச்செயலர் செல்வம் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரிக்கு முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகின்றனர். நாளை (மார்ச் 22) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரிக்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வரும் 24-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

அதைத்தொடர்ந்து 30-ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி ஏஎப்டி திடலில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பலரும் பல்வேறு நாட்களில் புதுச்சேரிக்கு பிரச்சாரத் துக்காக வருகின்றனர்.

இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர், செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in