

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் பங்கேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
உலகெங்கும் உள்ள பெண்கள்மற்றும் எங்கள் மகள்களுக்கு கரோனா பரவலுக்கு பிந்தையகாலத்தில் மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகை கட்டமைப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் உள்ளது.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதலை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக முதன்மையான திட்டங்களை இந்தியாவில் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால் 13.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் சமூக அளவில் பாலின பொதுக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.
தொழில்முனைவோர் மேம் பாட்டு திட்டங்களில் பெண் களுக்கு போதிய வாய்ப்பு வழங் கப்படுகிறது. இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.