Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

திரிபுராவிலும், டெல்லியிலும் நடந்த அதிசயம் கேரளத்திலும் நடக்கும்: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பேட்டி

மெட்ரோமேன் ஸ்ரீதரன்

மெட்ரோ ரயில் திட்டங்களை டெல்லி போன்ற பெருநகரங்களில் சிறப்பாக செயல்படுத்திய தால் ‘மெட்ரோ மேன்’ எனக் கொண்டா டப்படுபவர் ஸ்ரீதரன். தமிழகத்தில் ஆழிப்பேரலை அழிவுக்குப் பின்னர் பாம்பன் ரயில் பாலத்தைக் குறுகிய காலத்தில் கட்டிமுடித்த பெருமையும் ஸ்ரீ தரனுக்கு உண்டு. இப்போது 88 வயதாகும் தொழில்நுட்ப வல்லுனர் ஸ்ரீதரனை பாலக்காட்டில் களம் இறக்கி யுள்ளது பாஜக.

கட்சி கடந்து அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக முதலில் அறிவித்தது பாஜக. இதனால் கேரளத்தில் பாஜகவிலும் வலுவான முதல்வர் வேட்பாளர் இருக்கிறார் என மக்களை பேசவைத்தனர். தற்போது கேரளத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டுமே கொண்டிருக்கும் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திப்பதும் இதுவே முதல்முறை.

ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை, கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளிதரனோ, தேர்தலுக்கு பின்னரே முதல்வர் யார்? என்பது குறித்து தலைமை முடிவுசெய்யும் எனதெரிவித்தார். ஆனால் அதைப்பற்றி யெல்லாம் சட்டையே செய்யாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீதரன். காரணம், முதல்வர் இருக்கையையும் தாண்டி கேரள மக்களின் மனதில் இருக்கிறர் ஸ்ரீதரன்.

எட்டுமாதங்களில் முடித்துக்கொடுக்க வேண்டிய பாலாரி வட்டம் பாலத்தை ஐந்தே மாதங்களில் குறைவான பட்ஜெட் டில் கட்டி முடித்துக் கொடுத்தது மெட்ரோமேன் ஸ்ரீதரனின் மிக சமீபத்திய சாதனை. அதன் பின்னரே டெல்லிமெட்ரோ கார்ப்பரேசனில் இருந்து முற்றிலும் வெளியேறினார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் மெட்ரோமேன் ஸ்ரீதரன் அளித்தப் பேட்டி..

ஜனநாயகத்தை சீர்திருத்த அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்கிறீர்கள். நீங்கள் விரும்பும் மாற்றம் கேரளத்தில் பாஜகவால் எப்படி சாத்தியமாகும்?

நான் கொச்சி துறைமுகத்தில் வேலை செய்தபோது இரண்டு மாதங்களில் அங்கு பணி சூழலையே மாற்றினேன். பணியாளர்களின் மனநிலையையும் மாற்றியமைத்தேன். இரண்டே மாதத்தில் அது சாத்தியமாகும்போது ஐந்து ஆண்டுகளில் இது ஏன் சாத்தியமாகாது. நடக்கும்.

கேரளத்தில் பாஜகவுக்கு இப்போது ஒரு எம்.எல்.ஏ தான் இருக்கிறார். இப்படியான அரசியல் சூழலில் ஆட்சிக்கு வருவோம் என்பது முரணாக இல்லையா?

உங்களுக்கு சில வரலாறுகளை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். திரிபுராவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத ஒரு சூழல் இருந்தது. ஆனால் இன்று திரிபுராவில் பாஜக ஆளும் கட்சியாக இருக்கிறது. ஏன், தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா? கேரளத்தில் பாஜகவுக்குஇதுமிகவும் சிறந்த நேரம். காங்கிரஸுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் மாறி, மாறி வாக்களித்து மக்களே சோர்ந்து போயிருக்கும் நிலையில் இந்தத் தேர்தல் கேரள பாஜகவுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. இந்த முறை பாஜக அரசு அமையும் என நான் நம்புகிறேன். டெல்லியிலும், திரிபுராவிலும் நடந்த அதிசயம் கேரளத்திலும் நடக்கும்.

கேரளத்தில் லவ் ஜிகாத் அதிக அளவில் நடப்பதாக பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்கிறதே?

சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. நான் நேரடியான மற்றும் வெளிப்படையான விஷயங்களைத்தான் பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால், அனைத்துதரப்பினரையும் எங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளப் பார்க்கிறேன். நாம்பிரதான நீரோட்டத்திலிருந்து யாரையும் தனிமைப்படுத்தமுடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும்.

உங்களின் கருத்தியலுக்கும், பாஜகவின் சிந்தாந்தத்திற்கும் அதிக முரண்பாடுகள் இருக்கிறதே?

பாஜகவின் அனைத்து விஷயங்களுக்கும் நான் ஒத்துப்போகவில்லை. அதேநேரத்தில் இப்போதைய சூழலை நினைத்துப் பாருங்கள். பாஜக போன்று ஒரு கட்சி இல்லாவிட்டால் இந்த மாநிலமே இல்லாமல் போய்விடும். அந்த அளவுக்கு கேரளம் சீர்கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. அதை முதலில் சரிசெய்ய வேண்டும்.

நீங்கள் போட்டியிடும் பாலக்காடு தொகுதிவாசிகள் உங்கள் பிரச்சாரத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?

மிக அன்பாக, போகும் இடமெல்லாம் வரவேற்கிறார்கள். இரண்டே ஆண்டுகளில் பாலக்காடு தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக் காட்டுகிறேன் என்றுதான் பரப்புரை செய்து வருகிறேன். மக்கள் நிச்சயம் வெற்றியைத் தருவார்கள் என நம்புகிறேன். பாலக்காடு தொகுதிக்குள் ஏராளமான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இங்கு திடக்கழிவு மேலாண்மை அமைப்புகூட இல்லை. அதை ஆறு மாதங்களில் செய்ய முடியும். அதேபோல் என்னால் உடனே தொகுதிக்குள் இருக்கும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கமுடியும். நகரத்தின் சுத்தத்திலும் அக்கறை செலுத்துவேன். இதையெல்லாம் செய்துவிட்டாலே முன்மாதிரி தொகுதியாகி விடும்.

உண்மையிலேயே சொல்லுங்கள், நாட்டில் முன்பைவிட இப்போது வகுப்புவாதம் தலையெடுத்துள்ளதா?

இல்லவே இல்லை. நரேந்திர மோடிதலைமையிலான அரசாங்கத்தை விரும்பாத சிலர்தான் அப்படி பரப்புகிறார்கள். நாட்டில் பெரும்பான்மையான மக்கள்நரேந்திர மோடியை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் அவரால் 2-வது முறையாக பிரதமராக முடிந்தது. அரசியல் களத்தில் மோடியை எதிர்ப்பவர்கள் எங்காவது சின்ன தவறு கிடைக்காதா என தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மோடி பிரதமராக இல்லாவிட்டால் ஜம்மு, காஷ்மீர் நம்மைவிட்டு போயிருக்கும்.

தனிமை சிறையில் தலைவர்கள், இணையம், தகவல் தொடர்பு துண்டிப்பு என மோடி அரசு மீது அதில் கடும் விமர்சனங்களும் எழுந்ததே?

இது நாட்டின் நலனுக்காக ஒருவர் செய்ய வேண்டிய சிறிய அளவிலான தியாகம். இந்த சின்ன விஷயத்தை ஊதி மலையைப்போல் பெரிதாக்குவது அபத்தம். அது நியாயமும் அல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக ஊடகங் கள் அதைத்தான் செய்கின்றன. ஊடகங்கள் எதிர்க்கட்சியினரின் பிடியில் இருக்கின்றன.

தேர்தல் பிரச்சாரம் எப்படிப் போகிறது...வெயில் வேறு வாட்டி எடுக்கிறதே?

தினமும் காலை, மாலையில் தலா இரண்டு மணி நேரங்களை செலவுசெய்கிறேன். எனக்காக இல்லங்கள் தோறும் போய் வேலைசெய்யும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியே போய் சந்திக்கிறார்கள். நானும் தொகுதி வாசிகள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதிலும்கூட என்னால் ஒருமாற்றத்தை செய்யமுடியும் என நீங்கள்நினைத்தால் எனக்கு வாக்களியுங்கள். இல்லையெனில் எனக்கு வாக்களிக்கவேண்டாம். நான் கவலைப்படமாட்டேன். அது உங்களுக்கானது!’ என எழுதியிருக்கிறேன்.

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத்தானே கேரள அரசு நிறைவேற்றியது. அந்தப் பிரச்சினையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்த சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது. நீதிமன்றம் தீர்ப்புகொடுத்ததைச் சொல்கிறீர்கள். காவலர்கள் பாதுகாப்புடன், திருட்டுத்தனமாக சபரிமலை கோயிலுக்கு அழைத்துப் போகவா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது? கேரள அரசு ஏன் அப்படிச் செய்தது?

பெண்களை அரசு அழைத்துச் செல்லவில்லை எனச் சொல்கிறதே?

அவர்கள் தான் அதைச்செய்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இளம் பெண்கள் ஆலயத்துக்கு செல்ல முயன்றபோது தடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சபரிமலை ஐயப்பனின் பக்தர்களைக் அவர்கள் துன்புறுத்தியதை யாராலும் மறக்கவும் முடியாது. அரசு மக்களைமதிக்கவில்லை. குறிப்பாக பக்தர்களை.அரசாங்கம், காவல்துறை உதவியுடன்கலாச்சாரத்தை நாசப்படுத்தியிருக்கக் கூடாது.

இவ்வாறு மெட்ரோமேன் ஸ்ரீதரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x