காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரு வேறு சம்பவங்களில் 4 தீவிர வாதிகள் பாதுகாப்பு படையின ரால் கொல்லப்பட்டனர். பாகிஸ் தான் படையினரின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ரஜவுரி மாவட்டம், நவ்ஷெரா செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் ரோந்துப் படையினர் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுக்மேஷ் என்ற ராணுவ வீரர் படுகாயம் அடைந் தார். இதையடுத்து அவர் அருகில் உள்ள ராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எல்லையில் பதற்றத்தை தணிக்க, பூஞ்ச் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே பிரிகேடி யர் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் தரப் பில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.

இதனிடையே அனந்தநாக் மாவட்டம், அஸ்க்முக்கம் பகுதி யில் தீவிரவாதிகள் பதுங்கியிருப் பதாக கிடைத்த தகவலின் பேரில், சிலிகாம் என்ற கிராமத்தை பாது காப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்தனர். இதையடுத்து நடை பெற்ற மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர் கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது.

காஷ்மீரில் மற்றொரு சம்பவ மாக, குப்வாரா மாவட்டத்தின் அடந்த மனிகா வனப்பகுதியில் நேற்று 11-வது நாளாக தீவிரவாதி களை தேடும் பணி நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதே வனப் பகுதியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற மோதலில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந் தோஷ் மகதிக் வீரமரணம் அடைந் தார். நேற்று முன்தினம் நடை பெற்ற மோதலில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இப்பகுதியி லும் தொடர்ந்து தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in