Last Updated : 20 Nov, 2015 12:35 PM

 

Published : 20 Nov 2015 12:35 PM
Last Updated : 20 Nov 2015 12:35 PM

நிமோனியா, வயிற்றுப்போக்குக்கு அதிக குழந்தைகள் பலி: இந்தியாவுக்கு அவப்பெயர்

உலக அளவில் நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக உயிரிழக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம் என்கிறது சர்வதேச தடுப்பு மருந்து அணுக்க மையம்.

நோய் எதிர்ப்புச் சக்திகளை பெருக்கும் வாக்சைன் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு முனைப்புடன் மேற்கொண்டு வந்தாலும் சர்வதேச தடுப்பு மருந்து மையத்தின் 2015 அறிக்கை, கடந்த ஆண்டு அறிக்கையின் நகல் போலவே காட்சியளிப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிமோனியா, மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக 5-வயதுக்கும் குறைவான குழந்தைகளின் பலி எண்ணிக்கை இந்தியாவில் 2,97,114. இது பட்டியலில் முதலிடம் பிடித்த எண்ணிக்கையாகும். இதன் மூலம் நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, அங்கோலா ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது.

2015-ல் மட்டும் 5 வயதுக்குட்பட்டோரின் 4 மரணங்களில் ஒரு மரணம் இந்த இரண்டு நோய்களினால் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி நடவடிக்கைகள், தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது, மருத்துவத்துக்கான அடைதல் வழிமுறைகள், ஆன்ட்டி-பயாடிக் பயன்கள் உள்ளிட்ட சிகிச்சைகளை துரிதப்படுத்த இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.

ஆனாலும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து குழந்தைகளையும் நோய்-எதிர்ப்பு சக்தியுடையவர்களாக மாற்றும் வலுவான அரசியல் திட்டத்தை இந்த அறிக்கை அங்கீகரித்துள்ளது. பிரதமர் மோடியும், சுகாதார அமைச்சர் நட்டாவும் இது குறித்து நிறைய பேசியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x