

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை படைத்த இந்தியாவின் அதிநவீன அக்னி -1 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
ஒடிஸா மாநிலம் அப்துல் கலாம் தீவில் உள்ள ஒருங் கிணைக்கப்பட்ட ஏவுகணை பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று இந்த சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கு களை துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 700 கி.மீ, அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கும் வல்லமை படைத்தது.
வழக்கமான பயிற்சிக்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. தற்போது உருவாக் கப்பட்டுள்ள அக்னி- 1 ஏவுகணை 12 டன் எடை கொண்டது. அணு ஆயுதங்கள் உட்பட ஆயிரம் கிலோ எடை கொண்ட எந்தவொரு ராணுவ தளவாடங்களையும் எளிதாக சுமந்து செல்லும். விநாடிக்கு 2.5 கி.மீ., துாரத்துக்கு சீறி பாயும் அளவுக்கு அதன் வேகம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இலக்கு களை துல்லியமாக தாக்கி அழிப்பதற்காக அதிநவீன ‘நேவி கேஷன் சிஸ்டம்’ (வழிதட முறை) அதில் பொருத்தப்பட்டுள்ளது.
அக்னி ஏவுகணை முதல் முதலாக கடந்த 2002, ஜனவரி 25-ம் தேதி சோதித்து பார்க்கப்பட்டது. கடைசியாக கடந்த 2014 செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனையும் வெற்றிகரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.