

உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக அண்மையில் பதவியேற்ற தீரத் சிங் ராவத், பெண்களின் ஆடை நாகரிகம் குறித்த தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்றைய இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் ஏதேதோ ஆடைகளை அணிகின்றனர். கிழிந்த ஜீன்ஸ் அணிகின்றனர். சில பெண்களும் அதையே பின்பற்றுகின்றனர். ஒருமுறை விமானத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் கை நிறைய வளையல், முழங்காலில் கிழிந்த ஜீன்ஸ், பூட்ஸ் அணிந்திருந்தார். அவருக்கு இரண்டு சிறு குழந்தைகளும் இருந்தனர். ஏதோ தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துவதாகச் சொன்னார். கிழிந்த ஜீன்ஸுடன் சொன்ற அவர் சமூகத்தில் என்ன மாதிரியான நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்து தேசிய அளவில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ராவத்தின் பேச்சு அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.
உதரகாண்ட் காங்கிரஸ் தலைவர் ப்ரீதம் சிங் கூறுகையிக், தீரத்தின் பேச்சு அவமானகரமானது. அவர் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கரிமா, ஒரு முதல்வருக்கு இத்தகை பேச்சு அழகல்ல. இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் பேச்சு என்றார்.
ஆம் ஆதமி கட்சியும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் ஒரு மாநில முதல்வர் இவ்வாறாக பேசுவது ஏற்புடையதல்ல எனக் கண்டித்துள்ளார்.
மனைவியின் ஆதரவுக்கரம்;
இந்நிலையில், முதல்வரின் மனைவி ராஷ்மி தியாகி மட்டும் தனது கணவரின் பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டியுள்ளார். "சமூகத்தையும், தேசத்தையும் கட்டமைப்பதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம். நமது நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது. நமது அடையாளத்தையும், நமது நாட்டின் பாரம்பரிய ஆடைகளையும் அவர்களே காப்பாற்ற வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் பேசினார். ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளாது என்றார்.
பிரியங்காவின் பதிலடி..
உத்தரகாண்ட் முதல்வரின் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சற்று காட்டமாகவே பதிலளித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் சீருடையுடன் தலைவர்கள் இருக்கும் புகைப்படங்களைப் பகிரிந்து.. ஐயோ கடவுளே இவர்களின் முழங்காலும் தெரிகிறதே என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.