என்னை பாதுகாக்கவே புகார் அளித்தேன்: நடிகை ப்ரீத்தி ஜிந்தா

என்னை பாதுகாக்கவே புகார் அளித்தேன்: நடிகை ப்ரீத்தி ஜிந்தா
Updated on
1 min read

நெஸ் வாடியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே, போலீஸிடம் புகார் அளித்ததாக பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.

தன்னுடைய முன்னாள் காதலன் நெஸ் வாடியா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார் அளித்திருந்தார்.

பிரபல தொழிலதிபரும், கிங்ஸ் லெவன் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான நெஸ் வாடியா மீதும் நடிகை ப்ரீத்தி புகார் அளித்தது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள ப்ரீத்தி ஜிந்தா, "இது மிகவும் மோசமான நேரம் என்று நான் நினைக்கிறேன். நான், எனது உரிமைகளை கொண்டு இந்த விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்த விஷயத்தில் ஊடகங்கள், எனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு இந்த புகாரை அளிக்கவில்லை. என்னை பாதுகாத்துக் கொள்ளவே புகார் அளித்தேன்" என்றார் ப்ரீத்தி ஜிந்தா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in