மீண்டும் 35 ஆயிரத்தை கடந்தது கரோனா தொற்று: 3 மாதங்களில் இல்லாத பாதிப்பு
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களுக்கு பிறகு டிசம்பர் மாத நிலவரத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதங்களுக்கு பிறகு டிசம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,74,605 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 17,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,10,63,025பேர் குணமடைந்தனர்.
கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 172பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,216 ஆக அதிகரிதுள்ளது.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,52,364 ஆக உள்ளது. இதுவரை 3,71,43,255பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
