Last Updated : 18 Mar, 2021 10:24 AM

 

Published : 18 Mar 2021 10:24 AM
Last Updated : 18 Mar 2021 10:24 AM

'வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்காது': மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்

மேற்குவங்க பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருக்காது எனக் கூறியிருக்கிறார் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் போராடி வருகிறது, அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கூட்டணி காய்களை நகர்த்தி வருகிறது.

பாஜக ஏற்கெனவே முதல் நான்கு கட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. இந்நிலையில், அடுத்த 4 கட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக மத்திய தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டது. பாஜக தேசியத் தலைவர் நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் இந்த முக்கிய ஆலோசனையை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரை ஆலோசனை நீண்டது.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத் தலைவர் முகுல் ராய், "சீட் ஒதுக்குவது குறித்து பேசியாகிவிட்டது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்" என்றார்.

பாஜக மூத்த தலைவர் ராஜிப் பானர்ஜி கூறும்போது, "கிட்டத்தட்ட வேட்பாளர் தேர்வு முடிந்து பட்டியல் தயாராக உள்ளது. கட்சித் தலைமை சில முடிவுகளை எட்ட வேண்டியுள்ளது. விரைவில் முடிவு எட்டப்பட்டு பட்டியல் வெளியாகும்" என்றார்.

மேற்குவங்க கடைசி 4 கட்ட தேர்தலில், பாஜக சார்பில் இன்னும் சில எம்.பி.க்களும் களம் இறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. முகுல் ராய், சாந்தனு தாகூர், ஜெகநாத் சர்கார் ஆகியோர் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மேற்குவங்க பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருக்காது எனக் கூறியிருக்கிறார் அம்மாநிலத் தலைவர் திலீப் கோஷ். தான் மாநிலத் தலைவராக இருப்பதால், தேர்தல் பிரச்சாரம் தனது மேற்பார்வையில் நடைபெற வேண்டுமென்பதால் கட்சி மேலிடம் இந்த முடிவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x