Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM

ஜீயர்கள், சாதுக்களுக்கு நோட்டீஸ்; வருமான வரி அதிகாரிகள் மீது நடவடிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை

பிரயாக்ராஜ் (உ.பி)

ஜீயர்கள் மற்றும் சாதுக்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து அகிலபாரதிய சந்த் சமிதி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. எத்தகைய நிதியையும் பெறாத ஜீயர்களுக்கும், சாதுக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். தவறினால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அந்த அமைப்பு கடிதத்தில் எச்சரித்துள்ளது.

மடாதிபதிகள், ஜீயர்கள் மற்றும் சாதுக்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் அமைப்பாக அகிலபாரதிய சந்த் சமிதி சங்கம் விளங்குகிறது. 13 அகாராஸ் மற்றும் ஜீயர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்து தர்மத்தைக் கடைபிடிப்போரை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் அகில பாரதிய சந்த் சமிதி குறிப்பிட்டுள்ளது

சமிதியின் பொதுச் செயலரான சுவாமி ஜீத்ரானந்த் சரஸ்வதி, இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: 2019-ம் ஆண்டுகும்பமேளா நடந்தபோது அதற்கான பணிகள் சிலவற்றை மத்திய அரசின் ஒத்துழைப்போடு மாநில அரசு மேற்கொண்டது. இத்தகைய நடவடிக்கைகளினால்தான் பிரயாக்ராஜ் பகுதியில் கும்பமேளாவிற்கு வந்தவர்கள் சவுகர்யமாக தங்கமுடிந்தது.

யாத்ரிகர்களுக்கு வசதி

மேலும், இங்கு வாழும் யாத்ரிகர்கள் சவுகர்யமாக இருக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநில அரசு13 அகாராக்கள் மற்றும் சில மடங்களில் வசதிகளை மேம்படுத்தித் தந்துள்ளது. உத்தரப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைகளில் மத்திய அரசின் ஜல் நிகாரம் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

இந்த மேம்பாட்டுப் பணிகளுக் கான நிதியை மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அளித்து செயல்படுத்தியுள்ளது.

இதற்கான நிதியத்தை செலவிட்டதில் ஜீயர்களுக்கோ அல்லதுஅகாராக்களுக்கோ எவ்வித தொடர்பும் கிடையாது. இருந்தபோதிலும் 13 அகாராக்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ்அனுப்பப்பட்ட 13 அகாராக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியக் குடிமகனாக இருப் பவர், தான் பெறும் நிதி அல்லது பராமரிக்கும் கணக்கிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை உண்டு. ஆனால் எந்த நிதியையும் பெறாத ஜீயர்கள் இதற்கு எவ்விதம் விளக்கம் அளிக்க முடியும் என சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x