

கேரள சட்டப்பேரவை தேர்தலில் கன்னூர் மாவட்டம் தர்மதம் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில்முதல்வர் பினராயி விஜயன் போட்டியிட உள்ளார். கடந்த திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர்தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டார்.
அவரிடம் 2 சொந்த வீடுகள் இருப்பதாகவும், வாகனங்கள் ஏதுமில்லை என்றும் 2020-21-ம் நிதிஆண்டில் அவருடைய ஆண்டு வருவாய் ரூ.2.87 லட்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு ரூ.54 லட்சம் என்றும் இதில் ரூ.51.95 லட்சம் அசையா சொத்து என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
அவருடைய மனைவி கமலா விடம் ரூ.35 லட்சம் அசையா சொத்தும், வங்கியில் ரூ.5.47 லட்சம் இருப்பும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவியின் வருமானம் 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.16,400 என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பினராயி விஜயன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எதிர்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபாட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.1.23 கோடி என்றும் அவருடைய மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.2 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2020-21-ல் ரமேஷ் சென்னிதலா மீது 8 வழக்குகள் உள்ளன.