

தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப் பட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த 6 பேர், 4 நாட்களுக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் பத்ராசலம் வட்டத் தைச் சேர்ந்த டி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர்களான ராம கிருஷ்ணா, ஜனார்தன், சத் யநாராயணா, வெங்கடேஸ்வரலு, சுரேஷ் குமார், மானே ராம கிருஷ்ணா ஆகியோர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாவோ யிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டனர்.
போலி என்கவுன்ட்டர் செய்வது, கைது படலம், மலையேறும் பயிற்சி பெற்ற போலீஸாரின் தேடுதல் வேட்டை உட்பட தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டி இவர்களை கடத்தியதாக மாவோயிஸ்ட்டுகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், எந்த நிபந்தனையும் இன்றி கடத்தப்பட்ட அனைவரையும் சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள செர்லா வனப்பகுதியில் நேற்று விட்டுச் சென்றனர். மேலும் இவர்களை தாங்கள் கடத்தவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்தவே அழைத்துச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.