

ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில், போலீஸாரும், மத்திய ரிஸர்வ் படை போலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிஸாவின் கஜபதி, கன்ஜம், கந்தமால், கியோன்ஜார், ஜெய்பூர், மயூர்பஞ்ச், சாம்பல்பூர், தியோகர், சுந்தர்கர் மற்றும் நயாகர் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. எனினும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அந்த பகுதிகளில் மாவோயிஸ்ட் வன்முறைகள் படிப்படியாக குறைத்திருப்பதாக மாநில போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மால்கன்கிரி, கோராபுட், போலான்கிர், நுவாபாடா, ராயகடா, பராகர், காலாஹந்தி மற்றும் நபாரங்பூர் ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாவட்டங்களில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி கள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக சாம்பல்பூர், தியோகர் மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களை ஒட்டிய வனப்பகுதிகளில் மீண்டும் ஒருங்கிணைந்து, தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்த வும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முயன்று வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சுந்தர்கர் மாவட்டத்தில் நேற்று மத்திய ரிஸர்வ் படை வீரர்களுடன் இணைந்து மாநில போலீஸாரும் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதிக்குள் பதுங்கி இருந்த இரண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதி களை தேடுதல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
மாவோயிஸ்ட் தீவிரவாதி களை ஒழிக்க, ஒடிஸா அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவ தாகவும், இதற்காக பதற்றமான பகுதிகளில் கூடுதல் படைகளை நியமித்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரி வித்துள்ளது.