

கரோனா காரணமாக வெளிநாட்டு வேலையை விட்டு வந்த இந்தியர் களின் எதிர்காலம் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. மேலும் அவர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர் கூறினார்.
கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவி லிருந்து உள்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கரோனா காலத்தில் வெளிநாட்டு வேலையை இழந்த வர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: இதற்கு அந்தந்த நாடுகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும். நாடுகள் தங்களின் பொருளா தாரத்தை சரிவிலிருந்து மீட் டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதேநேரம் அதன் முந்தைய பணியாளர்களின் வாழ் வாதாரம் குறித்தும் சிந்திக்க வேண்டும். இந்தியர்களை மீண்டும் பணிக்கு அழைப்பது தொடர்பாகப் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக வளைகுடா நாடுகள் விரைந்து இந்தியப் பணியாளர்களைத் திரும்ப அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க கோரிக்கை வைத்து வருகிறோம்.
பிரதமர் மோடி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் தலைவர்களோடு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். நானும் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறேன். விரைவில் வளைகுடா நாடுகள் இந்தியர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
அதேசமயம் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்கு வரத்து நடைமுறைகளும் முன்புபோல மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
| இனவெறித் தாக்குதலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவி ராஷ்மி சமந்த் இனவெறி சர்ச்சையால் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் நகரைச் சேர்ந்தவர் 22 வயது ராஷ்மி. மொத்தம் இருந்த 3,708 வாக்குகளில் 1,966 வாக்குகளைப் பெற்று தலைவராக தேர்வாகியிருந்தார். அவர் மீது சமூக வலைதளங்களில் இனவெறி ரீதியிலான சர்ச்சை வெடித்ததை அடுத்து அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாநிலங்களவையில் பேசும்போது, “இனவெறி விவகாரத்தில் மத்திய அரசு ஒருபோதும் கண்ணை மூடிக் கொண்டு இருக்காது. இனவெறி விவகாரம் எந்த வடிவில் வந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க மாட்டோம். இனவெறித் தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதுதொடர்பாக பிரிட்டனுடன் நாங்கள் பேசுவோம்" என்றார். முன்னதாக இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் அஸ்வினி வைஷ்ணவ் எழுப்பிப் பேசினார். |