Last Updated : 15 Mar, 2021 08:48 AM

 

Published : 15 Mar 2021 08:48 AM
Last Updated : 15 Mar 2021 08:48 AM

மத பேதமின்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

மத பேதமின்றி மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பேசிய அவர், "இந்த பூமி நமக்கு அருளிய வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. ஆனால் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது இந்தியாவில் உலக மக்கள் தொகையில் 16.5% மக்கள் உள்ளனர். ஆனால், இங்குள்ள நிலப்பரப்பு வெறு 3.5%. மண்ணின் மீதும் வளத்தின் மீதான அழுத்தம் இது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வேலைவாய்ப்பின் எண்ணிக்கை உயரவில்லை ஆனால் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

அரசாங்கம் மட்டுமல்ல மொத்த அரசியல் அமைப்புகளும், கட்சிகளும் மக்கள் தொகை குறைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரு குழந்தைகள் திட்டத்தை அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சி நடைமுறைப்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், அவர்களின் வாக்குவங்கி அரசியல் கொள்கையால் அதை காங்கிரஸ் முழுமையாக செயல்படுத்தத் தவறியது.
இப்போதைய சூழலில் மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவுக்கும், உலகிற்கும் பெரிய சவாலாக இருக்கிறது. மத பேதமின்றி மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x