கேரள மாநிலத்தின் 86 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கேரள மாநிலத்தின் 86 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் இந்த முறை பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

தேர்தல் தேதி நெருங்குவதால் வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, 140 தொகுதி களில் 48 தொகுதிகளை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள காங்கிரஸ், 92 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக 86 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.

உம்மன் சாண்டி

இதில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டிக்கு அவரது சொந்த தொகுதியான புதுப்பள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலவுக்கு ஹரிபாட் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் பாஜகவின் கைவசம் இருக்கும் ஒரே தொகுதியான நேமம், வடகரா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான கே. முரளிதரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜகவிடம் இருந்து இந்த நேமம் தொகுதியை கைப்பற்ற, இடதுசாரி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in