Published : 24 Nov 2015 09:47 am

Updated : 24 Nov 2015 09:47 am

 

Published : 24 Nov 2015 09:47 AM
Last Updated : 24 Nov 2015 09:47 AM

அமெரிக்காவில் உள்ள பெண்ணுடன் ‘ஸ்கைப்’ மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிபதி:தெலங்கானாவில் அரிய சம்பவம்

அமெரிக்காவில் உள்ள பெண் ணிடம், ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கினார் நீதிபதி. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு கள் அதிகரித்தன. அதனால் கோபம் அடைந்த கணவன், ‘திருமணம் செல்லாது’ என்று அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனைவியும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு உயர்க் கல்விக் காக அந்த பெண் அமெரிக்கா சென்றுவிட்டார். இதற்கிடையில் கணவன் மனைவி இருதரப்பு குடும்பத்தாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். இதையடுத்து தம்பதியினர் ஒருமனதாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான இறுதி விசாரணை கம்மம் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது.

சம்பந்தப்பட்ட பெண் அமெரிக் காவில் இருப்பதால் அவரால் நேரில் ஆஜராக இயலாது. எனவே, இணைய தளத்தின் ‘ஸ்கைப்’ மூலம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த பெண்ணின் சார்பில் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்று ஸ்கைப் மூலம் அந்த பெண்ணிடம் கம்மம் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.வெங்கட ரமணா விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இதேபோல் ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி வெங்கட ரமணா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். இதுகுறித்து பெண்ணின் வழக்கறிஞர் பசவா புன்னையா கூறியதாவது:

என்னுடைய கட்சிக்காரர் கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக் காவில் இருக்கிறார். அவரால் நேரில் வரமுடியவில்லை எனவே, ஸ்கைப் மூலம் விசாரிக்க நீதிபதி யிடம் வேண்டுகோள் வைத்தோம். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, லேப்டாப் மூலம் ஸ்கைப்பில் எனது கட்சிக்காரரிடம் விசாரணை நடத்தினார்.

முதலில் அவருடைய தந்தை மற்றும் கணவரை (இப்போது முன்னாள் கணவர்) ஸ்கைப்பில் அடையாளம் காட்டும்படி நீதிபதி கூறினார். அதேபோல் அவர் அடையாளம் காட்டினார். பின்னர் கட்சிக்காரரின் கடைசி கருத்தை கேட்டறிந்து விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வாறு பசவா புன்னையா கூறினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


அமெரிக்காபெண்ஸ்கைப் மூலம் விசாரணைவிவாகரத்துநீதிபதிதெலங்கானாஅரிய சம்பவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author