

‘‘பதற்றம் மற்றும் போராட்டங்க ளால் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியாது’’ என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
கடந்த 2013-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 169 இளம் ஐஏஎஸ் அதிகாரி களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து உரையாடினார். அப்போது மோடி கூறியதாவது:
நீங்கள் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறீர் கள். அங்கெல்லாம் நீங்கள் கொண்டு வரும் சாதகமான மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும். பதற்றம், போராட்டம், எதிர்ப்பு போன்றவற்றால் மாற்றங் களை கொண்டுவர முடியாது. உங்களுடைய பணியில் முதல் 10 ஆண்டுகள் மிகவும் கடினமானது. இந்த ஆண்டுகளில் நீங்கள் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும்.
நமது இலக்கு, எதிர்காலப் பார்வையை நோக்கி நமது நடவடிக்கைகள் இருக்க வேண் டும். மாவட்டங்களில் உள்ள பிரச் சினைகள், அவற்றை தீர்க்கும் முறை போன்றவற்றை கற்பதுதான் மிக முக்கியம். நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்த பொதுமக்களின் நண்பனாக ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.