

இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் 4 நாட்கள் பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றார்.
இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் பாதுகாப்புத்துறையில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப் பாக கடல்சார் பாதுகாப்பில் ஒத் துழைப்பு அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. இலங்கை ராணுவ தலைமையகம் மற்றும் பயிற்சி மையங்களை தல்பீர் சிங் சுஹாக் பார்வையிடுகிறார்.