

நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போது, அவர்கள் விதித்த உப்பு வரிக்கு எதிராக மகாத்மா காந்தி தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு, தண்டி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில், “ஆர்எஸ்எஸ் தலைமையிலான சர்வாதிகார சக்திகளால் இந்தியா பிணைக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான சுதந்திரத்துக்காக நமது தனிப்பட்ட கடமைகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காந்திஜியின் முன்மாதிரி போராட்டத்தால் நாம் வழிநடத்தப்பட்டு, சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம். ஜெய் ஹிந்த்!” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட மற்றொரு பதிவில், “மாணவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கு போலீஸ் தடியடி, தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டுவது, தேசவிரோத முத்திரை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றையே மத்திய அரசு வழங்குகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.