

பாதுகாப்புத் துறை சார்ந்த பேரங் களில் வெளிநாட்டு நிறுவனங் களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் செயல்பட முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம், அவர்கள் கூடுதல் ஆதா யத்தை எதிர்பார்க்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக மனோகர் பாரிக்கர் கூறியதாவது:
பாதுகாப்புத் துறை சார்ந்த பேரங்களில், தங்களின் சார்பாக முகவர்களை நியமிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், முகவர்களுக்கான நியாயமான சன்மானத்தை முன்கூட்டியே குறிப்பிட வேண்டும். பேரம் முடிந்த பிறகு, ஊக்கத் தொகை, சிறு பங்கு, வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததற்கான கட்டணம் என எவ்வகையிலும் கூடுதல் பணம் அளிக்க அனுமதி இல்லை.
முகவர்கள் (ஏஜென்ட்) என்ற வார்த்தைப் பதம் இடைத் தரகர்களைக் குறிக்காது. இவ் விஷயத்தில் முறைகேட்டை, கேலியான வர்த்தகத்தை அரசு அனுமதிக்காது.
முகவர் நிறுவனங்களின் பிரதிநிதியாக அவர் கருதப்படு வார். இதற்கு முன்பே முகவர்கள் தொடர்பாக சட்டத்தில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், அவ்வார்த்தை, அவரின் பணி என்ன என்பது பற்றி விளக்கமான வரையறை இல்லை. எனவே, புதிய பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறை வரைவு இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. அதில், முகவர் தொடர் பாக விளக்கமான வரையறை இடம்பெறும்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, வர்த்தக பேரத்துக்காக ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு தன் பிரதிநிதியை அனுப்பிக் கொண் டிருக்க முடியாது. எனவே, முகவரை நியமிக்க அனுமதிக் கப்படுகிறது. ஆனால், அவருக் கான சன்மானம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் வெற்றி பெற்றால் கூடுதல் பணமோ, தோல்வியடைந் தால் அபராதமோ அவருக்கு அந் நிறுவனம் விதிக்கமுடியாது. சில சமயங்களில் நிறுவனங்கள் அபராதம் விதித்து கொடுத்த தொகையை திரும்பப் பெறு கின்றன.
பாதுகாப்புத் துறை தொடர்பான பேரங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர அரசு முயற்சி எடுத்து வருகிறது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.