‘துடிப்பான இந்தியா’ கருத்தாக்கத்தில் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி

‘துடிப்பான இந்தியா’ கருத்தாக்கத்தில் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி
Updated on
1 min read

மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்ட தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் ‘குடியரசு தினம் 2016 - அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி’யை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக பொதுமக்கள் தங்கள் வடிவமைப்பை அனுப்பி வைக்கலாம்.

இந்த வடிவமைப்பு ‘துடிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்திய குடிமகன்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். வரும் 30-ம் தேதிக் குள் டெல்லியில் உள்ள அஞ்சல் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான விதிமுறைகள் மற்றும் மேலும் விவரங்கள் அஞ்சல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று சிறந்த வடிவமைப்பு களுக்கு முறையே ரூ.10,000, ரூ.6,000, ரூ.4,000 பரிசாக வழங்கப் படும். போட்டி முடிவு வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in