சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு
Updated on
1 min read

சமீபத்தில் பாஜகவில் இணைந்த பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்திக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்தப் பொதுக்கூட்டத்தில், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையானது (சிஐஎஸ்எஃப்), சிறப்பு பாதுகாப்பு குழு மூலம் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட இருக்கிறது. மிதுன் சக்ரவர்த்திக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதன் அடிப்படையில் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உட்பட 104 நபர்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in