

திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்குரார்பணம் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன சேவைகள் நடந்ததது.
பின்னர் 12 ரக வண்ண மலர் களாலும் 6 வகை துளசி போன்ற உயர்ந்த இலைகளாலும் புஷ்ப யாகம் நடந்தது. இதில் 7 டன் வண்ண மலர்களால் உற்சவ மூர்த்தி களுக்கு 20 முறை அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதல வாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.