

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, துணை ராணுவப்படை உயர் அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவெல், நுண்னறிவுப் பிரிவு தலைவர் ஆசிப் இப்ரஹிம், 'ரா' உளவுப் பிரிவு தலைவர் அலோக் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனையின் போது, நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான திட்டம் வகுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேட்டியளித்த ராஜ்நாத் சிங்: உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாதுகாப்பு விவகாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய திட்டங்களுடன் முன்வர வேண்டும் என கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.