

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டார். பாரத் ப்யோடெக்கின் கோவேக்ஸின், ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராஜெனக்காவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கிறது.
99 வயது நிரம்பிய ஹீரா பென், எந்த நிறுவன தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பது குறித்து பிரதமர் விளக்கவில்லை.
இருப்பினும் தனது தாயார் தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எனது தாயார் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
கரோனா தடுப்பூசி பெற தகுதியுடைய அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி கடந்த மார்ச் 1ம் தேதி தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். அவர் வரும் 28ம் தேதி இரண்டாம் டோஸ் எடுத்துக் கொள்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார், குஜராத் மாநிலம் காந்திநகரில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசிக்கிறார்.