டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்
Updated on
2 min read

டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனி, குடியிருப்புகளை முறைப் படுத்தும் மசோதா நேற்று நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியின் தேசிய தலைநகர எல்லைப்பகுதி சட்டத்தின் (சிறப்புப் பிரிவு) 2-வது திருத்த மசோதா 2021-ஐ மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா கடந்த மாதம் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்ட நிலையில் நேற்று இது மக் களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர் மசோதா மீதான விவாதத் துக்கு அமைச்சர் பதிலளித்துப் பேசி னார். அவர் பேசும்போது, “டெல்லி யின் மக்கள்தொகை 2011 கணக் கெடுப்புப்படி 1.6 கோடியாக உள்ளது. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியும்போது டெல்லி மக்கள்தொகை 2 கோடி யைத் தொட வாய்ப்புள்ளது. டெல்லி மற்றும் அதன் எல்லையைச் சுற்றி அமைந்துள்ள அங்கீகாரமற்ற காலனிகள், குடியிருப்புகளை முறைப்படுத்த இந்த மசோதா வகை செய்கிறது.

அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் பணியை ஏற் கெனவே இருந்த மத்திய அரசுகள் செய்யத் தவறிவிட்டன. எனவே நாங்கள் இந்தத் திட்டத்தை மிகவும் தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு பணியாற்றினோம்.

தேசியத் தலைநகரில் அங்கீகாரமற்ற காலனி, குடியிருப்புகளை முறைப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டம் கடந்த ஆண்டு இறுதியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தற்போது இந்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்துள்ளோம். 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த குடியிருப்புகளை பொதுமக்கள் முறைப்படுத்திக் கொள்ள முடியும்.

அங்கீகரிக்கப்படாத காலனிகள் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவு செய்திருந்தன. வேண்டுமென்றே அரசியல் கட்சிகள் இந்தத் திட்டத்தை தாமதித்து வருகின் றன என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவி வந்தது. பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை முடியாமல் இருந்த தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந் தனர். ஆனால் அந்தப் பிரச்சினை களை எல்லாம் பாஜக தலைமையி லான மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்து மசோதாவைத் தாக்கல் செய்துள்ளோம்.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அங்கீகாரமற்ற காலனிகளின் எண்ணிக்கை தொட ர்பாக டெல்லி அரசிடம் மத்திய அரசு சார்பில் கேட்டிருந்தோம். அதுதொடர்பான விவரங்களைத் தர 2017 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2019 ஜூலை வரை காலஅவகாசம் தேவை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவரங்களுக்காக 2 ஆண்டுகள் தேவை என்று டெல்லி அரசு கேட்டதால், நாங்கள் அவசரச் சட்டம் கொண்டு வந்தோம்.

தற்போது அவசரச் சட்டத்துக்கு மாற்றாக மசோதாவைத் தயாரித்து தாக்கல் செய்துள்ளோம்" என்றார். விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் சுமார் 1,700 அங்கீகார மற்ற காலனிகள் அமைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். விவாதத்தில் பாஜக எம்.பி.க்கள் மீனாட்சி லேக்கி, ரமேஷ் பிதூரி உள் ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in