நள்ளிரவு சோதனை தொடர்பான வழக்கு: சோம்நாத் பாரதியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்

நள்ளிரவு சோதனை தொடர்பான வழக்கு: சோம்நாத் பாரதியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்
Updated on
1 min read

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற நள்ளிரவு சோதனை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதியின் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இரவு, டெல்லியின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்ததாகக் கூறி, அப்போது அமைச்சராக இருந்த சோம்நாத் பாரதி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, தங்களை தாக்கியதாகவும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அங்கு வசித்துவரும் உகாண்டா நாட்டு பெண்கள் புகார் செய்தனர். மேலும் டெல்லியில் திடீரென சோதனை நடத்தியதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சோம்நாத் பாரதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் பாரதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்த வழக்கில் போலீஸார் உண்மையை மறைக்கின்றனர். என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தபோது பல்வேறு முக்கிய சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் வீடியோ பதிவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே, இதுகுறித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித் துவிட்டது. இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பூபேஷ் குமார், நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in