

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மிகச் சிறப்பாக உரையாற்றினார் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் உரையாற்றினார். அப்போது அவர், தேசத்தந்தை மகாத்மா காந்தி, நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை பிரிட்ட னில் கல்வி பயின்றதை நினைவு கூர்ந்து பேசினார்.
பிரதமர் மோடியின் பேச்சு அர்த்தமுள்ளதாகவும் நகைச்சுவை உணர்வுடனும் இருந்ததாக இந்திய, பிரிட்டிஷ் நாளிதழ்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
இந்நிலையில் மோடியின் பேச்சை காங்கிரஸ் கட்சி வழக்கம் போல கடுமையாக விமர்சித்துள் ளது. இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மிகச் சிறப்பாக உரையாற்றியுள்ளார். இதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். தேவையில்லாமல் விமர்சிக்கக்கூடாது.
சில பிரிட்டிஷ் ஊடகங்களின் நிருபர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. எதை கேட்க வேண்டும், எதை கேட் கக்கூடாது என்ற சபை நாகரிகம் அவர்களிடம் இல்லை. இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சில சீக்கிய அமைப்புகள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மோடி பேட்டியின்போது இது குறித்து கார்டியன் பத்திரிகையின் நிருபர் அநாகரிகமாக கேள்வி எழுப் பினார். இதை ஒமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.