Published : 17 Nov 2015 09:10 AM
Last Updated : 17 Nov 2015 09:10 AM

சீக்கியரை தீவிரவாதியாக சித்தரித்து இணையத்தில் புகைப்படம்: பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டதாக விஷமம்

பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிர வாதியாக சித்தரித்து வீரேந்தர் ஜப்பல் சிங் என்ற சீக்கியரின் புகைப்படம் சமூக வலைத்தளங் களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வீரேந்தர் கனடாவில் வசித்து வருகிறார். அவர் கையில் ஐபேட் உடன் எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து வெடிகுண்டு ஜாக்கெட் அணிந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்தான் பாரீஸ் தாக்குதலை நடத்திய தீவிரவாதி என்றும் விஷமத்தனமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமும் செய்தியும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாத ஆதரவு இணையதளம்கூட அந்த மார்பிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதனை வீரேந்தர் ஜப்பல் சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் தனது உண்மையான செல்பி புகைப்படத்தை வெளியிட்டு, அது மார்பிங் செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார். தற்போது வீரேந்தர் சிங்கிற்கு ஆதரவாக இணையதளவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் தலைப் பாகை, தாடி வைத்திருக்கும் சீக்கியர்களை தீவிரவாதிகளாக கருதி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. அதே வெறுப்புணர்வு காரணமாகவே வீரேந்தர் சிங் புகைப்படமும் மார்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x