

பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய், எரிவாயு நிறுவனமான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த 140 கோடி டாலர் வரி நிலுவையை இந்திய அரசிடமிருந்து வசூலிக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
கெய்ர்ன் நிறுவனம் 1999-ம்ஆண்டில் இந்தியாவில் எண் ணெய், எரிவாயு அகழ்வுப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற் றது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராவா எனுமிடத்தில் எண்ணெய் அகழ்வைக் கண்டுபிடித்து 2002-ம்ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியது.
2007-ம் ஆண்டு இந்நிறுவனப் பங்குகள் கெய்ர்ன் இந்தியா நிறுவனமாகத் தொடங்கப்பட்டு பட்டியலிடப்பட்டன. 2006-2007-ம்ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனம் 10 சதவீத பங்குகளை தாய்நிறுவனமான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றியது. மூலதனம் மூலம் கிடைத்த ஆதாயத்துக்கு வரி செலுத்துமாறு வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.
இதன்படி ரூ.24,500 கோடி தொகையை வரியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக இந்திய உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத சூழலில் சர்வதேச மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முதலீட்டு ஆதாயம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
2011-ம் ஆண்டு கெய்ர்ன் நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துக்கு விற்பனை செய்தது. வரி நிலுவை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் 10 சதவீத பங்குகளை விற்பதற்கு வரித்துறை தடை விதித்தது. இந்த 10 சதவீத பங்குகள் முடக்கி வைக்கப்பட்டன.
2007-2008-ம் ஆண்டு பங்கு பரிமாற்றம் செய்தபோது விதிக்கப்படாத மூலதன ஆதாய வரித் தொகையை முன்தேதியிட்டு விதிக்க முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் 3 பேரடங்கியஅமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் வரி நிலுவையை வசூலிக்க இந்திய அரசு எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், கேமன் தீவுகளில் உள்ள நீதிமன்றங்களையும் கெய்ர்ன் நாடியுள்ளது.
சொத்துகளை முடக்கலாம்
இந்திய அரசு நிலுவைத் தொகையை திரும்ப அளிக்காவிடில், இங்குள்ள அரசுக்குச் சொந்தமான சொத்துகளை கெய்ர்ன் நிறுவனம் முடக்கலாம் என சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள தால், இந்நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் சர்வதேச தீர்ப்பாய உத்தரவை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்துள்ளது கெய்ர்ன்.
இதனிடையே 2017-ம் ஆண்டில்கெய்ர்ன் நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டி யலிடுவதிலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் வரி நிலுவையை வசூலிப்பதில் தீவிரமாக உள்ள தாக கெய்ர்ன் நிறுவனம் தனதுமுதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இதனிடையே மேல் முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.