

மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின், நம்பகத்தன்மை, செயலாக்கம் மற்றும் குடிமக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட் நகரங்களுக்கான திட்டத்தில் முதல் 20 நகரங்களுக்கான மதிப்பீடுகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை செயல்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் எல்லா உள்கட்டமைப்புகளுடனும் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. முதல் கட்டமாக, 98 நகரங்களுக்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின் நம்பகத்தன்மை, செயலாக்கம் மற்றும் குடிமக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட் நகரங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
மேலும், இரண்டாம் கட்டத்துக்கான நகரங்கள் தேர்வுக்காக பல்வேறு வகையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதாவது மொத்தம் உள்ள நநூறு மதிப்பெண்களில், 30 மதிப்பெண்கள் செயலாக்கத்துக்கும், 20 மதிப்பெண்கள் முடிவுகளை பொருத்தும், 16 மதிப்பெண்கள் குடிமக்களின் ஆலோசனையின் அடிப்படையில் இலக்கை அடையாளம் காணுவதற்கும் என மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
தவிர, இத்திட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் பல்வேறு கருத்துக்களின் அடிப்படையில், இந்த மதிப்பீடுகள் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.