

‘லவ் ஜிகாத்’தை தடுக்க மத்திய பிரதேச அரசு கடந்த ஜனவரி 9-ம் தேதி அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மத சுதந்திர சட்ட மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
புதிய சட்ட மசோதா குறித்து பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டத்தின் பல்வேறு அம்சங் களுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதற்கு உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பதில் அளித்தார்.
சுமார் ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் 60 நாட்களுக்கு முன்பாக ஆட்சியரிடம் விண்ணப் பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மதபோதகரும் 60 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோரை கட்டாயப் படுத்தியோ, ஏமாற்றியோ மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு கள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் வரை மதமாற்ற திருமணங்கள் ரத்து செய்யப்படும் என பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.