

ஆந்திர மாநிலம் அமராவதியில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது:
மாநிலத்தில் உள்ள அரசு, நகராட்சி, மாநகராட்சி, குருகுலப் பள்ளிகளில் 7-ம் வகுப்பு முதல் இன்டர்மீடியட் (பிளஸ்-2)வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தொடங்கப்படும். அதன் பிறகு நாப்கின் கொள்முதல் நடைமுறைகள் முடிந்து, ஜூலை 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வரும். ஒரு மாணவிக்கு மாதம் 10 நாப்கின்கள் வீதம் ஆண்டுக்கு 120 நாப்கின்கள் வழங்கப்படும். இதற்காக அரசு ஆண்டுக்கு ரூ. 41.4 கோடி செலவிடும். கிராமப் புறங்களில் சாதாரண பெட்டிக் கடைகளிலும் மானிய விலையில் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு ஜெகன்மோகன் கூறினார்.