Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி சேமிப்பு: 7,500-வது மக்கள் மருந்தகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்

மக்கள் மருந்தகம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி மிச்சமாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டன. சந்தைவிலையை விடவும் 50 முதல் 90 சதவீதம் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் 7 வரையில் ‘மக்கள் மருந்தக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, சிம்லா, போபால், அகமதாபாத், மங்களூரு மற்றும் டையுவில் உள்ள மாருதி நகர் ஆகிய 5 நகரங்களில் மக்கள் மருந்தக மையங்களில் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.

மேலும் மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் உள்ள ‘நார்த் ஈஸ்டர்ன் இந்திரா காந்தி ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்' நிறுவனத்தில், நாட்டின் 7,500-வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் மோடி நேற்றுநாட்டுக்கு அர்ப்பணித்தார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு மக்கள் மருந்தகம், மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த மருந்தகங்களில் மருந்துகளின் விலை குறைவாக உள்ளதால் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு மிச்சமாகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருந்தகங்கள் மட்டுமே இருந்தன. இப்போது இது 7,500 ஆக அதிகரித்துள்ளது. இதை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.
பெண்கள் மத்தியில் சுயசார்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 1,000-க்கும் மேற்பட்ட மையங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. இந்தமையங்கள் மூலம் இதுவரை 11 கோடி சானிட்டரி நாப்கின்கள் குறைவானவிலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, 75 ஆயுஷ் மருந்துகளும் இந்த மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆயுர்வேத மற்றும் ஆயுஷ் மருந்து தேவையையும் இந்த மருந்தகங்கள் பூர்த்தி செய்கின்றன. மக்கள் மருந்தகத் திட்டத்தினால் ஏழை மக்கள் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி வரை சேமிக்க முடிகிறது.

மக்கள் மருந்தகங்களை நடத்தும் சில பயனாளிகளுடன் நான் கலந்துரையாடினேன். அப்போது, இந்த திட்டம் ஏழைகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அவர்கள் மூலம் உணர முடிந்தது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வரும் ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், வடகிழக்கு மாநில மக்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இதுபோல மருத்துவ காப்பீட்டு திட்டம் (ஆயுஷ்மான் பாரத்) மூலம் 50 கோடி மக்கள் பயனடைகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1.5 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதன்
மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வரை அவர்களுக்கு சேமிப்பு கிடைக்கிறது.

இவைதவிர, இதயத்தில் பொருத்தப்படும் ஸ்டென்ட் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,500 கோடிசேமிப்பாகிறது. இதுபோன்ற மத்தியஅரசின் பல்வேறு சுகாதார திட்டங்
களால் ஏழை, நடுத்தர மக்கள் மொத்தமாக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை சேமிக்க முடியும். மருத்துவசிகிச்சை குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பதையும் அவை அனைத்து மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதையும் இலக்காகக்
கொண்டு மத்திய அரசு கொள்கைகளை உருவாக்கி வருகிறது.மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முதன்மை நாடாக திகழ்கிறது. குறிப்பாக, கரோனா தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறோம். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றநோக்கத்தில், நாடு முழுவதும் உள்ளஅரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி வெறும் ரூ.250-க்குபோடப்படுகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளை கொண்டிருப்பதற்கு நாடு பெருமை கொள்கிறது. கரோனாதடுப்பு மருந்துகளை வெளிநாடு
களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் சில நாடுகளுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறோம்.

கடந்த 6 ஆண்டுகளில் புதிதாக180 மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் 2014-ல் நாடுமுழுவதும் 55 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் இருந்த நிலையில், இப்போது கூடுதலாக 30 ஆயிரம் இடங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல மருத்துவ மேற்
படிப்புக்கான இடங்கள் 30 ஆயிரம் ஆகஇருந்தது. இப்போது கூடுதலாக 24 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x