வெற்றி குறித்து நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் கருத்து

வெற்றி குறித்து நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் கருத்து
Updated on
1 min read

பிஹார் தேர்தலில் மகாக்கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:

பாரதிய ஜனதா ஒரு கட்சி அல்ல. அது ஒரு முகமூடி. சமூகத்தை மதரீதியாக கட்டமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பிஹார் மக்கள் அந்த முயற்சியை முறியடித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நாட்டில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். பிஹார் மக்களை மோடி முட்டாளாக்க நினைத்தார் ஆனால் மக்கள் அவரை முட்டாளாக்கி விட்டனர். பிரச்சாரத்தின் போது அவர்கள் மேற்கொண்ட அத்தனை தந்திரங்களும் தோல்வியில் முடிந்தது.

மக்கள் எங்கள் சார்பாக தீர்ப்பளித்துள்ளார்கள். நாம் தவறு செய்தால் மக்கள் நம்மை மன்னிக்கப் போவதில்லை. நிதிஷ் குமார்தான் முதல்வர் அதில் எந்த வித குழப்பமும் இல்லை.

நிதிஷ் குமார் கூறியதாவது:

இது பிஹார் மக்களின் சுயமரியாதைக்குக் கிடைத்த வெற்றி. இதற்காக பிஹார் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தார். பிரச்சாரத்தின் போது எது நடந்திருந்தாலும் சரி, மத்திய அரசின் ஆதரவு நமக்கு முக்கியமானது.

கூட்டணியாக நாங்கள் இணைந்து செயல்படுவோம். எதிர்கட்சியினர் மீது எங்களுக்கு எந்த வித கசப்புணர்வும் இல்லை. பிஹாரின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in