

இந்தியாவை விட்டு வெளியேற விரும்புபவர்கள் தாரளமாக வெளி யேறலாம். அதனால் மக்கள் தொகை குறையும் என பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சகிப்பின்மை தொடர்பாக மத்திய அரசு மீது பல்வேறு விமர் சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த திங்கள்கிழமை இந்தி நடிகர் ஆமிர் கான், பரிசளிப்பு விழா ஒன்றில் பேசும் போது, இந்தியாவில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதால் நாட்டை விட்டு வெளியேற தன் மனைவி விரும்பினார் எனக் கூறியிருந்தார். மேலும், விருதுகளை திருப்பிக் கொடுக்கும் போராட்டம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற் கான வாய்ப்பு எனவும் தெரிவித் திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறும்போது, “நாட்டை விட்டு யாரேனும் வெளியேற விரும்பி னால், நாங்கள் அவர்களைத் தடுக்கப்போவதில்லை. குறைந்த பட்சம் நம் நாட்டில் மக்கள் தொகை குறையும்” என்றார்.