Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

சர்வதேச தரத்தில் இந்திய பொருட்களை உற்பத்தி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

உற்பத்தி சார்ந்த சலுகைத் திட்டம் குறித்து காணொலி காட்சி நேற்று மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேக் இன் இந்தியா திட்டத்தை கடந்த 7 ஆண்டுகளாக அரசு தீவிரமாக செயல்படுத்தி வரு கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தித் துறை மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான உற்பத்தி மூலமே அதிக அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கமும் சாத்திய மாகும். வளர்ச்சியடைந்த நாடு கள் அனைத்துமே உற்பத்தியை அதிகரித்த நாடுகளாக்தான் உள்ளன.

இந்தியாவும் இதே வழியில் அத்தகைய அணுகுமுறையை கடைபிடிக்கிறது. அதிகபட்ச சிரத்தையுடன் பழுதில்லாத பொருட்கள் உற்பத்தி மூலமே சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும். சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான பொருட் களை உற்பத்தி செய்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நமது பொருட்களின் உற்பத்தி செலவு, தரம் மற்றும் அதன் உழைப்பு உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் தயாரிப்பை விட சிறப்பானதாக இருக்க வேண்டும்.

அத்தகைய தன்மையை எட்ட நீண்ட காலம் ஒருங்கிணைந்து உழைத்தால் மட்டுமே எட்ட முடியும். நமது தயாரிப்புகள் எளிதில் உபயோகிக்கும் தன்மை கொண்ட வையாகவும், நவீனமானதாகவும், கட்டுபடியாகும் விலையிலும், இருக்க வேண்டும்.

பட்ஜெட் போடுவது மற்றும் கொள்கை வகுப்பது மட்டுமே அரசின் செயல்பாடுகளாக இருக்க கூடாது. இதில் நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.

கடந்த ஆண்டு கரோனா பரவ லால் ஏற்பட்ட தேக்க நிலையை ஏற்றுக் கொண்டாலும், அதனால் ஏற்பட்ட புதிய வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி விரைவான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும். உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு ஒரு துறைக்கு அளிக்கப்பட்டால் அதன் பலன் அனைத்துத் துறைகளுக்கும் கிடைக்கும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் பார்மா துறைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்க சலுகை அளிக்கப்பட்டால் அதனால் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும்.

எரிசக்தித் துறையானது நவீன பேட்டரி மூலம் மேலும் நவீனமயமாகியுள்ளது. வேளாண் துறையிலும் உற்பத்தி சார்ந்த சலுகைகள் அளிக்கப்படுவது நல்ல பலனை அளிக்கிறது. இது ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்தல் துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் தொழில் துறைக்கு ஊக்க சலுகையானது உள்ளீடு பொருட்களுக்கு மானியம் வழங்குவதாக இருந்தது. இப்போது உற்பத்தி அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு மோடி பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x